ஓ.பி.எஸ் வீடு எதிரே கைகலப்பில் ஈடுபட்ட மகளிர் அணியினர்

சென்னையில் ஓ.பி.எஸ் வீடு எதிரே கைகலப்பில் ஈடுபட்ட மகளிர் அணியினர், காயங்களுடன் போலீஸில் புகாரளித்துள்ளனர்.
x
சென்னையில் ஓ.பி.எஸ் வீடு எதிரே கைகலப்பில் ஈடுபட்ட மகளிர் அணியினர், காயங்களுடன் போலீஸில் புகாரளித்துள்ளனர். கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு விருகம்பாக்கம் மகளிர் அணி நிர்வாகி ஷகிலா, மதுரவாயல் நிர்வாகி மஞ்சுளா, உள்ளிட்டோர் சென்றுள்ளனர். அப்போது, அவர்களை தடுத்து நிறுத்திய செங்கல்பட்டு மகளிர் அணி நிர்வாகி கனகலட்சுமி, ஓ.பி.எஸ்.ஐ, தற்போது சந்திக்க அனுமதி இல்லை என கூறியுள்ளார். இதனால், வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இருதரப்பும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளது. இதில், கையில் காயமடைந்ததாக செங்கல்பட்டு நிர்வாகி கனகலெட்சுமி, அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்