"உ.பியில் மாற்றம் ஏற்பட பாஜக கடும் உழைப்பு" - பிரதமர் மோடி பிரசாரம்

உத்தர பிரதேசத்தில் மாற்றத்தை ஏற்படுத்த கடுமையாக உழைத்து வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
x
உத்தர பிரதேசத்தில் மாற்றத்தை ஏற்படுத்த கடுமையாக உழைத்து வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவை  தேர்தலை ஒட்டி காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 
உத்தரபிரதேசத்தில் அமைக்கப்படும் ஆக்சிஜன் ஆலைகள், விவசாயிகளுக்கு வருவாய் ஈட்டுவதற்கான புதிய வழியை வழங்கும் என கூறியுள்ளார். விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்ததாகவும் இந்த இலக்கை அடைந்துள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். 
உத்தர பிரதேசத்தில் மாற்றத்தை ஏற்படுத்த கடுமையாக உழைத்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஒரு சிலர் பழிவாங்குவதற்கான வாய்ப்பை தேடுவதாக, சமாஜ்வாதி கட்சியை சூசகமாக புகார் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்