"பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்" - விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்
x
பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இஸ்ரேலிடம் இருந்து பெகாசஸ் மென்பொருள் வாங்கியது உண்மை என்பதை தி நியூயார்க் டைம்ஸ் நாளேடு அம்பலப்படுத்தி இருப்பதாகவும்,  

உளவு மென்பொருளை வாங்கவில்லை என நாடாளுமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் பொய்கூறி, மோடி அரசு தேச துரோகக் குற்றம் இழைத்துள்ளதாகவும் விமர்சித்து உள்ளார்.

2017ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்துக்கு திடீரென 10 மடங்கு கூடுதலாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டதாகவும்,

தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மூலம், மக்களின் 300 கோடி ரூபாய் வரிப்பணத்தில் உளவு மென்பொருள் வாங்கப்பட்டு உள்ளதாகவும் திருமாவளவன் கூறி உள்ளார்.

இதற்கெல்லாம் பொறுப்பேற்று பிரதமர் பதவியிலிருந்து மோடி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ள திருமாவளவன்,

பெகாசஸ் விவகாரத்தில் நாட்டு மக்களை இனிமேலும் ஏமாற்ற முடியாத அளவுக்கு, மோடி அரசு பிடிபட்டு விட்டதாகவும் கூறி உள்ளார்.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காதது, பெகாசஸ் விவகாரம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தில் நாளை குடியரசுத் தலைவர் உரையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்கிறது என்றும் திருமாவளவன் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்