சட்டமன்ற தேர்தலை ஒட்டி பிரதமர் மோடி பிரச்சாரம். .ஜன.31ம் தேதி காணொலி மூலம் பிரச்சாரம்
சட்டமன்ற தேர்தலை ஒட்டி பிரதமர் மோடி பிரச்சாரம். .ஜன.31ம் தேதி காணொலி மூலம் பிரச்சாரம்
சட்டமன்ற தேர்தலை ஒட்டி பிரதமர் மோடி பிரச்சாரம். .ஜன.31ம் தேதி காணொலி மூலம் பிரச்சாரம்
உத்திரபிரதேசத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி வரும் 31ம் தேதி காணொலி மூலம் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.உத்திரபிரதேசத்தில் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளுக்கு பிப்ரவரி 10ம் தேதியில் இருந்து தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்காக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி காணொலி மூலமாக ஜனவரி 31ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கௌதம புத்தா நகர், முசாபர் நகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய உள்ளார். காணொலியில் 50 ஆயிரம் பேரிடம் பிரதமர் பேசுவதற்கு ஏற்றார்போல் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Next Story