இன்று விஜய் மக்கள் இயக்கம் ஆலோசனை கூட்டம் - வெளியாகுமா முக்கிய முடிவுகள் ?
இன்று நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் 169 இடத்தில் போட்டியிட்டு 129 இடங்களில் வெற்றி பெற்றனர். இதனை தொடர்ந்து நகர்ப்புற தேர்தலிலும் மக்கள் இயக்கத்தினர் களமிறங்க நடிகர் விஜய் அனுமதி அளித்துள்ளார்.
மக்கள் இயக்கத்தின் கொடியையும் தனது புகைப்படத்தையும் பயன்படுத்திக்கொள்ள நடிகர் விஜய் சில நாட்களுக்கு முன்பு அறிக்கை விடுத்திருந்தார். அதனடிப்படையில் தொடர்ந்து நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க நிர்வாகிகள் பல்வேறு பகுதிகளில் நகர்ப்புற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
அதில் நகர்ப்புற தேர்தலில் போட்டியிடுவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
Next Story