ராஜேந்திர பாலாஜி ஜாமினில் விடுவிப்பு

பண மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
x
அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், கடந்த 5 ஆம் தேதி கர்நாடாக மாநிலத்தில் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். பின்னர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து தனக்கு ஜாமீன் வழங்ககோரி உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், பாஸ்போர்ட்டை போலீசில் ஒப்படைக்க வேண்டும், காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் 4 வார காலம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவு நகலை சிறைத்துறை அதிகாரிகளிடம் சமர்பித்துவிட்டு, திருச்சி சிறையில் இருந்து ராஜேந்திரபாலாஜியை அவரது வழக்கறிஞர்கள் அழைத்து சென்றனர்

Next Story

மேலும் செய்திகள்