உத்தரபிரதேசத்தில் சூடு பிடித்த தேர்தல் களம் - சமாஜ்வாதியில் இணைந்த பாஜக முன்னாள் அமைச்சர்

உத்தர பிரதேச மாநிலத்தில், பாஜகவில் இருந்து மேலும் 13 எம்எல்ஏக்கள் சமாஜ்வாதி கட்சியில் இணைய உள்ளதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் சூடு பிடித்த தேர்தல் களம் - சமாஜ்வாதியில் இணைந்த பாஜக முன்னாள் அமைச்சர்
x
உத்தர பிரதேச மாநிலத்தில், பாஜகவில் இருந்து மேலும் 13 எம்எல்ஏக்கள் சமாஜ்வாதி கட்சியில் இணைய உள்ளதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 10ம் தேதி துவங்கி மார்ச் 7 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த நிலையில், மாநிலத்தின் இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தின் மிக முக்கிய தலைவரான சுவாமி பிரசாத் அக்கட்சியிலிருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.

அவர் தமது ராஜினாமா கடிதத்தில், தலித், இதர பிற்படுத்தப்பட்டோர், விவசாயிகள், வேலை இல்லாதோர், சிறு தொழிலாளர்கள் மீது கடும் அடக்குமுறை நடைபெறுவதாக  புகார் கூறியுள்ளார். பின்னர் அவர் அகிலேஷ் யாதவை சந்தித்து அந்த கட்சியில் இணைந்தார். இதனை தொடர்ந்து மூன்று எம்எல்ஏக்களான ரோஷன் லால் வர்மா, பிரிஜேஷ் பிரஜாபதி மற்றும் பகவதி சாகர் ஆகியோர் ராஜினாமா செய்வதாக அறிவித்து சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பாஜகவைச் சேர்ந்த மேலும் 13 எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணையவுள்ளதாக கூறியுள்ளார். இத்தகைய நிகழ்வுகளால் உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்