காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள் - தொண்டர்கள் புடை சூழ முன்னாள் அமைச்சர் சாமி தரிசனம்
கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி தமது பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரும்புத்தாது முறைகேடு வழக்கில் கைதாகி தற்போது கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி ஜாமினில் உள்ளார். இந்நிலையில், இன்று தனது சொந்த ஊரான பெல்லாரியில் 55 வது பிறந்தநாளை கொண்டாடினார். அங்குள்ள துர்கா கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்த ஜனார்த்தன ரெட்டி, கோவிலுக்கு 55 தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை வழங்கினார். பின்னர், தனது ஆதரவாளர்களுடன் புடை சூழ வந்து கோவிலில் வழிபட்டார். 500- க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் முக கவசம் இன்றியும், சமூக இடைவெளியையும் கடைபிடிக்கவில்லை. கொரோனா நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதெல்லாம் மக்களுக்கு மட்டுமே பாஜகவைச் சேர்ந்தவர்களுக்கு இல்லை என இந்த நிகழ்வை சுட்டிக்காட்டி காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
Next Story