"பிரதமர் மோடி 15 நிமிடங்கள் மட்டுமே காத்திருப்பு" - பாஜக குற்றச்சாட்டிற்கு நவ்ஜோத் சித்து பதிலடி
பிரதமர் மோடி 15 நிமிடங்கள் மட்டுமே காத்திருந்ததை விமர்சிப்பவர்களுக்கு, தலைநகரில் ஓராண்டிற்கு மேலாக நீடித்த விவசாயிகளின் காத்திருப்பு ஏன் தெரியவில்லை என்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

பஞ்சாப்பில் மோடிக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மாநில அரசின் பாதுகாப்பு குறைபாடே காரணமென கூறி பாஜவினர் போர்க்கெடி தூக்கியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பிரதமர் மோடி 15 நிமிடங்கள் மட்டுமே காத்திருந்ததாகவும், தலைநகரில் விவசாயிகள் ஓராண்டிற்கு மேலாக காத்திருந்ததாக நவ்ஜோத் சித்து கூறியுள்ளார். மேலும், நிகழ்ச்சியில் 70 ஆயிரம் இருக்கைகளுக்கு 500 மட்டுமே நிரம்பி இருந்ததால் பிரதமர் தனது நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு, மாநில அரசு மீது பழி சுமத்துவதாக சாடினார்.
Next Story