"மாநாடு திரைப்படத்தை வெற்றிப்படமாக பரிசளித்த ஆண்டு" - நடிகர் சிம்பு உருக்கமான அறிக்கை

தனிப்பட்ட முறையில் மாநாடு திரைப்படத்தை வெற்றிப்படமாக பரிசளித்த ஆண்டாக மிகப்பெரிய கொண்டாட்ட மனநிலையுடன் 2021-ஐ முடிக்கிறேன்
x
"மாநாடு திரைப்படத்தை வெற்றிப்படமாக  பரிசளித்த ஆண்டு" - நடிகர் சிம்பு உருக்கமான அறிக்கை 

தனிப்பட்ட முறையில் மாநாடு திரைப்படத்தை வெற்றிப்படமாக  பரிசளித்த ஆண்டாக மிகப்பெரிய கொண்டாட்ட மனநிலையுடன் 2021-ஐ முடிக்கிறேன் என நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில், நம்மில் பலரும் நெருங்கிய சொந்தங்களை இழந்து, இறப்பையும் நன்மையையும் கடந்த வருடம் கடந்து வந்து இந்த புதிய வருடத்தை காண இருக்கிறோம் என தெரிவித்த அவர் மிகப்பெரிய கொண்டாட்ட மனநிலையுடன் 2021 ஆண்டை முடிக்கிறேன் என்றும் 2022ஆம் ஆண்டும் இதே மகிழ்வுடன் எனக்கும் உங்களுக்கும் அமைய வேண்டுகிறேன் என்றும் தெரிவித்து ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து கூறி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்