8 மாதங்களில் என்ன செய்தது திமுக அரசு? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
ஒரு நாள் மழைக்கே சென்னை மீண்டும் மிதப்பதாகவும், ஆட்சி பொறுப்பேற்று 8 மாதங்களாகியும், திமுக அரசு என்ன செய்தது என, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு நாள் மழைக்கே சென்னை மீண்டும் மிதப்பதாகவும், ஆட்சி பொறுப்பேற்று 8 மாதங்களாகியும், திமுக அரசு என்ன செய்தது என, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை ஓய்ந்திருந்த போது வடிகால்களை சீரமைத்திருந்தால் பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.மின்வாரிய ஊழியர்களின் அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணம் என பொது மக்கள் குற்றம்சாட்டும் நிலையில்,எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, அமைச்சரை பதவி விலக சொன்ன ஸ்டாலின், இப்போது மின்துறை அமைச்சரை பதவி விலக சொல்வரா என கேள்வி எழுப்பியுள்ளார்.தங்களது இயலாமையால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு, எதிர்க்கட்சிகளை குறை கூறாமல், உண்மையான அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்று, அந்த அறிக்கையில் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story