ஒமிக்ரான் பரவல் - பிரதமர் பயணம் ஒத்திவைப்பு

ஒமிக்ரான் பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லவிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
x
ஒமிக்ரான் பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லவிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 
பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜனவரி ஆறாம் தேதி ஐக்கிய அரபு அமீரகதிற்குப் பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பயணத்தின் போது இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையேயான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை இருநாட்டு தலைவர்களும் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பல்வேறு நிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த நிலையில் ஐக்கிய அமீரக பயணம் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
உலகம் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பு உருவெடுத்து உள்ளதால் பிரதமரின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்