மதுரை ஆவின் நிறுவனத்தில் முறைகேடு ?

மதுரை ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இரவு முழுவதும் நடத்திய விசாரணையில் திருப்பதி லட்டு தயாரிப்புக்கான நெய் அனுப்பியதில் முறைகேடு நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
x
மதுரை ஆவின் நிறுவனத்தில் நடைபெற்ற லஞ்சஒழிப்புத் துறையினர் விசாரணையில் திருப்பதி லட்டு தயாரிப்புக்கு அனுப்பப்பட்ட நெய்யில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி பதவி வகித்த போது ஆவின் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில், மதுரை ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்  நேற்று இரவு முதல் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற பணி நியமனங்கள், கொள்முதல்கள், வருவாய் இழப்பு உள்ளிட்டவை குறித்து ஆவின் மேலாளர், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் லஞ்சஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், திருப்பதி லட்டு செய்வதற்காக அனுப்பப்பட்ட நெய்யில் முறைகேடு நடந்துள்ளதாகவும், மேலும் தனியார் நிறுவனங்களுக்கு போலியான ஆவணங்களை பயன்படுத்தி நெய் விற்பனை செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்