அதிமுக செய்தால் அது "ரத்தம்" திமுக மேற்கொண்டால் "தக்காளி சட்னியா"? - ஓ.பி.எஸ் அதிரடி டுவிட்

விவசாய இணைப்புகளில் மின்மீட்டர் பொருத்தும் பணியை உடனடியாக திமுக அரசு நிறுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்
x
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள அவர், அதிமுக ஆட்சியில் மின் பயன்பாட்டை கணக்கிட  விவசாய இணைப்புகளில் மின்மீட்டர் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட போது திமுக எதிர்ப்பு தெரிவித்ததாகவும், ஆனால் அதே திட்டத்தை தற்போது முதல்வர் நடைமுறைப் படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதிமுக செய்தால் அது "ரத்தம்" திமுக மேற்கொண்டால் "தக்காளி சட்னியா"? என்று கேள்வி எழுப்பியுள்ளார்...மேலும், இப்பணியை நிறுத்திவிட்டு, மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்