ரூ.1,743 கோடி சொத்து - தேர்தல் தோல்விக்கு பின்னர் வாடகை ஆட்டோவில் சென்ற பணக்கார வேட்பாளர்
மேலவை தேர்தலுக்கான வேட்பு மனுவில் ஆயிரத்து 743 கோடி ரூபாய் சொத்து மதிப்பு காட்டியிருந்த வேட்பாளர், தோல்விக்கு பின்னர் ஆட்டோவில் சென்ற சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் சட்டமன்ற மேலவைக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் போட்டியிட்டனர்.காங்கிரஸ் சார்பில் மேலவைக்கு போட்டியிட்ட கே.ஜி.எப் பாபு என்கிற யூஷப் ஷெரிப் வேட்பு மனு தாக்கல் செய்தார்.அப்போது தனக்கு ஆயிரத்து 743 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதன்மூலம் தேர்தலில் போட்டியிடும் பணக்கார வேட்பாளர் என்ற பெயரை பெற்றதுடன் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தார். இந்த நிலையில் கர்நாடக மேலவைக்காண வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்த பணக்கார வேட்பாளரான யூஷப் ஷெரிப், பெங்களூரு நகர தொகுதியில் பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது சொகுசு காரில் வந்தவர், தேர்தலில் தோல்வியை தழுவியவுடன் மனமுடைந்து அங்கு நின்றிருந்த வாடகை ஆட்டோவில் தனது வீட்டிற்கு புறப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில் மேலவை தேர்தலில் பாஜக 12 இடங்களும், காங்கிரஸ் 11 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் சுயேட்சை தலா ஒரு இடம் என வெற்றி பெற்றிருந்தனர்
Next Story