"மக்களே என்னுடைய தெய்வங்கள்" - பிரதமர் நரேந்திர மோடி

நம் நாட்டில் செய்ய முடியாதது என்று எதுவுமே இல்லை என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மக்களே என்னுடைய தெய்வங்கள் - பிரதமர் நரேந்திர மோடி
x
நம் நாட்டில் செய்ய முடியாதது என்று எதுவுமே இல்லை என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

காசி விஸ்வநாதர் கோயிலில் புதிய வளாகத்தை ​திறந்து வைத்து பேசிய அவர், அன்பு தான் நமது பண்பாடு என்றார்.

இந்தியாவின் பழமைக்கும், சக்திக்கும், பக்திக்கும் இன்றைய நிகழ்ச்சி சாட்சியாக விளங்குகிறது எனவும்

என்னை பொருத்தவரை மக்களே என்னுடைய தெய்வங்கள் என்றும் கூறினார்.

நம் நாட்டில் செய்ய முடியாதது என்பது எதுவுமே இல்லை  என்று பெருமிதம் தெரிவித்த மோடி,

அயோத்தியை மற்ற முக்கிய நகரங்களுடன் இணைக்கும் வகையில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

கேரளாவின் குருவாயூர் கோயில், தமிழகத்தின் காஞ்சிபுரம், வேளாங்கண்ணி ஆகிய தலங்கள் சாலை மார்க்கமாக இணைக்கப்பட்டுள்ளன என்றும்

காசி நகர் புலவர் பேசுவதை காஞ்சி நகரில் கேட்க ஒரு கருவி செய்வோம் என்று பாரதியார் பாடியுள்ளார்  என்றும் பிரதமர் கூறினார்.

காசியில் இருந்து திருடப்பட்ட அன்னபூரணியின் சிலை சில நூறு ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் இங்கே வந்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்