மாரிதாஸ் கைது - ஆளுநருடன் அண்ணாமலை சந்திப்பு

மாரிதாஸ் மீது குண்டர் சட்டம் போட தயாராகிறதா தமிழக அரசு என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
x
காவல்துறையினர் 124-ஏ சட்டப்பிரிவில் 
மாரிதாஸ் மீது வழக்கு தொடுப்பதாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். திமுகவினர் அவதூறு பரப்பினால் காவல்துறை கண்களை மூடி கொள்வதாகவதாக குற்றம்சாட்டியுள்ள அண்ணாமலை , ஒரு  தேசியவாதி  கருத்து சுதந்திரத்துடன் தவறை சுட்டிகாட்ட விரும்பினால் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். பாஜக 17 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளதாகவும், அனைத்து மாநிலங்களிலும் சிஆர்சிபி சட்டம் செல்லும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.   பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்றும் 
இதை பாஜக பார்த்து கொண்டு சும்மா இருக்காது என்றும் அண்ணாமலை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்