"விவசாயிகள் உயிரிழப்புகளை மத்திய அரசு மறைக்க முயற்சி" - காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கண்டனம்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகள் குறித்த தரவுகள் இல்லை என மத்திய அரசு கூறியதற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் உயிரிழப்புகளை மத்திய அரசு மறைக்க முயற்சி - காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கண்டனம்
x
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகள் குறித்த தரவுகள் இல்லை என மத்திய அரசு கூறியதற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்படுமா? என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, இந்த விவகாரத்தில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்திடம் எந்த பதிவும் இல்லை என கூறியது. எனவே நிதி உதவி வழங்குவது தொடர்பான கேள்வி எழவில்லை என தெரிவித்துள்ளது. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் உயிரிழந்த தியாகிகளுக்கு நிவாரணம் வழங்காமல் பிரதமர் மோடி, தப்பிக்க பார்ப்பது ஏன் என, கேள்வி எழுப்பியுள்ளார். 

அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் அரசு ஏன் கண்ணியத்துடன் நடந்து கொள்வதில்லை?என வினவிய ராகுல்காந்தி, உயிரிழந்த விவசாயிகளின் பெயர், செல்போன் எண்கள் கொண்ட பட்டியலையும் வெளியிட்டார். பிரதமர் மோடி தாம் தவறு செய்து விட்டதாக தேசத்தின் முன்பு ஒப்பு கொண்ட நிலையில், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க மறுப்பது ஏன் என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்