மம்தா பேச்சால் தேசிய அரசியலில் அதிர்வலை... காங்கிரசை ஓரம் கட்டும் மம்தா பானர்ஜி...
ஐக்கிய முற்போக்கு கூட்டணி இல்லை... என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறியது தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
ஐக்கிய முற்போக்கு கூட்டணி இல்லை... என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறியது தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தேசிய அரசியலில் நட்சத்திர தலைவராக பார்க்கப்படுகிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி...
மேற்கு வங்கத்தில் 3-வது முறையாக முதல்வர் அரியணை ஏறியிருக்கும் மம்தா, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் ஆட்சியை பிடிக்க முயற்சித்து வருகிறார்.
தன்னுடைய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தேசிய அளவில் வலுப்படுத்த காய் நகர்த்தி வருகிறார். இதற்காக அவர் விரிக்கும் வலையில் விழுவது, பெரும்பாலும் பிற மாநில காங்கிரஸ் தலைவர்களாகவே இருக்கின்றனர். இதனால் திரிணாமுல் காங்கிரசுக்கும், காங்கிரசுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.
ஏற்கனவே டெல்லி வந்தால் சோனியாவை சந்திப்பது என்ன கட்டாயமா என கேள்வி எழுப்பி அதிர வைத்திருந்த மம்தா பானர்ஜி, மும்பையில் சரத் பவாரை சந்தித்து பேசிய பின்னர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்று எதுவும் இல்லை எனக் கூறியது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
2004 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியமைத்தது. அப்போது அக்கூட்டணிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியென பெயர் வைத்தது கருணாநிதி எனக் கூறியிருக்கும்
திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இல்லாத மம்தா இதுகுறித்து பேசுவது முறையல்ல என கூறியிருக்கிறார்.
இதற்கிடையே ஐக்கிய முற்போக்கு கூட்டணி இல்லையென கூற மம்தாவுக்கு உரிமை இல்லை எனக் கூறியிருக்கும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா, பாஜக ஆட்சிக்கு வர மம்தா உதவக் கூடாது என விமர்சித்துள்ளார்.
மும்பையில் மம்தாவிடம் பேசிய சரத்பவாரும், பா.ஜ.க எதிர்ப்பு அணியில் காங்கிரசை ஓரம்கட்ட முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story