ராகுல்காந்திக்கு எதிராக மனு தாக்கல் - போக்சோவில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ராகுல்காந்தி மீதான குற்றச்சாட்டு குறித்து போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.
x
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி டெல்லியில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டார். அப்போது சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ஆறுதல் கூறியதுடன், அந்த புகைப்படங்களை டிவிட்டரில் பகிர்ந்தார்.  பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் அடையாளம் வெளியே காட்டக்கூடாது என்பதால், ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முகமதுரஸ்வி என்பவர் வழக்குப்பதிவு செய்தார். அதன் மீதான விசாரணையில், மனுதாரர் தாக்கல் செய்துள்ள மனு போக்சோ சட்டத்தின் கீழ் வருவதால் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு மனுதாரர் தொடரும்படி நீதிபதி அறிவுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்