ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கு - விசாரணையை துவங்கினார் 3வது நீதிபதி

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகார் தொடர்பான வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வந்ததை அடுத்து, 3வது நீதிபதி நிர்மல்குமார், விசாரணையை துவக்கினார்.
ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கு - விசாரணையை துவங்கினார் 3வது நீதிபதி
x
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகார் தொடர்பான வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வந்ததை அடுத்து, 3வது நீதிபதி நிர்மல்குமார், விசாரணையை துவக்கினார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் இரு வேறு தீர்ப்புகளை வழங்கினர்.இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நிர்மல்குமார் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் நீதிபதி நிர்மல்குமார் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான் 2 நீதிபதிகள் அமர்வில் மாறுபட்ட தீர்ப்பு வந்ததால், வழக்கை 2க்கும் மேலுள்ள நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும் என்றும், மூன்றாவது நீதிபதி விசாரிக்க முடியாது என்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தல்ல என்றார். மேலும் முடித்து வைத்த  வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்து உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இந்த வழக்கில் நாளையும் வாதம் தொடர்கிறது.

Next Story

மேலும் செய்திகள்