ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது- பவன் கல்யாண்

தமிழக முதல்வர் ஸ்டாலினின் செயல், அனைத்து மாநிலங்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளதாக நடிகர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது- பவன் கல்யாண்
x
தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அன்புக்குரிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

எந்த ஒரு கட்சியும் ஆட்சிக்கு வர அரசியல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ள நடிகர் பவன் கல்யாண், 

ஆட்சிக்கு வந்த பின் அரசியல் செய்யக்கூடாது என்பதை, செயல்களால் மு.க.ஸ்டாலின் செய்துவருவதாக புகழாரம் சூட்டியுள்ளார். 

மு.க.ஸ்டாலினின் ஆட்சி நிர்வாகம், அரசின் செயல்பாடுகள் ஆகியவை தமிழகத்துக்கு மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களுக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது என டுவிட்டர் பதிவில், மீண்டும் ஒருமுறை வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்