ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு - பிரதமருக்கு நன்றி தெரிவித்து ஓபிஎஸ் கடிதம்

மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
x
மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில் 27 சதவீத இடஒதுக்கீட்டு முறையை நடப்பாண்டு முதலே நடைமுறையில் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது என்றும், இதன் மூலம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவர் என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இந்த இடஒதுக்கீடு நடவடிக்கையானது பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மீதான தங்களின் அக்கறையை காட்டுவதாகவும் கடிதத்தில் ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்