காவிரி-குண்டாறு-வைகை இணைப்பு திட்டம் : வைகோ கேள்விக்கு மத்திய அரசு பதில்

தமிழக அரசு கோரிக்கை வைத்த நிலையில், காவிரி-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக, எம்.பி. வைகோவின் கேள்விக்கு மத்திய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.
காவிரி-குண்டாறு-வைகை இணைப்பு திட்டம் : வைகோ கேள்விக்கு மத்திய அரசு பதில்
x
தமிழக அரசு கோரிக்கை வைத்த நிலையில், காவிரி-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக, எம்.பி. வைகோவின் கேள்விக்கு  மத்திய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார். காவிரி குண்டாறு இணைப்பு மட்டும்தானா? நாடு முழுவதும் நதிகளை இணைக்க உள்ளீர்களா? தமிழக அரசிடம் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டதா என கேள்வி எழுப்பி இருந்தார். 1980ஆம் ஆண்டு ஆகஸ்டில், வளமான நதியில் இருந்து வறட்சியான நதிகளுக்கு நீர் பகிரும் தேசிய முன்னோக்கு திட்டம் வரையப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். 16 திட்டங்கள் தென்னிந்தியாவில் செய்யவுள்ளதாக கூறிய அவர், வெள்ளப் பெருக்கின் போது, தெற்கே வெள்ளாறு வரை நீரை பகிர உள்ளதாகவும், தமிழக அரசு கோரிக்கை விடுத்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்