நீட் தீர்ப்பு-முதலமைச்சர் வரவேற்பு

நீட் ஆய்வு குழுவிற்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
நீட் தீர்ப்பு-முதலமைச்சர் வரவேற்பு
x
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், 'நீட் தேர்வு விலக்கு சட்டரீதியாக இருந்தால் பா.ஜ.க ஏற்கும்' என சட்டமன்றத்தில் நயினார் நாகேந்திரன் தெரிவித்த நிலையில், ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வழக்கு தொடர்ந்த‌து அப்பட்டமான இரட்டை வேடம் என விமர்சித்து உள்ளார்.பா.ஜ.க.வின் முயற்சியை கண்டிக்காமல், வேடிக்கை பார்த்தது ஏன்? என எடப்பாடி பழனிசாமியால் விளக்க முடியுமா? எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களின் கனவை நிறைவேற்றுவதற்கான தொடக்கப் புள்ளி இந்த தீர்ப்பு என குறிப்பிட்டு உள்ள முதலமைச்சர்.முதல் வெற்றியே, முழு வெற்றியாக மாறும் என்ற நம்பிக்கையை தமிழக அரசுக்கு இந்த தீர்ப்பு அளித்து உள்ளதாக தெரிவித்து உள்ளார்.மேலும், ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை கிடைத்ததும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு அடுத்தடுத்து மேற்கொள்ளும் என்றும்,ஆனால் அதற்குள் இந்த ஆண்டுக்கான தேர்வுத் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், இந்த நடவடிக்கைகள் அதற்குள் முடிவடைய இயலாத சூழல் ஏற்பட்டு உள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை எதிர்கொள்ளும் நெருக்கடி மிகுந்த சூழல் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது வருந்த‌தக்கது என்றும்,  ஆனாலும், நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தோம் என்ற நிலையை நிச்சயம் உருவாக்குவோம் என ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்