"மாநிலங்களவை இடைத் தேர்தலுக்கு தயார்" - விரைவில் மாநிலங்களவை தேர்தலுக்கு வாய்ப்பு

மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கு தயார் என தமிழகம், மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் தேர்தல் ஆணையத்திடம் கூறியுள்ளன.
மாநிலங்களவை இடைத் தேர்தலுக்கு தயார் - விரைவில் மாநிலங்களவை தேர்தலுக்கு வாய்ப்பு
x
"மாநிலங்களவை இடைத் தேர்தலுக்கு தயார்" - விரைவில் மாநிலங்களவை தேர்தலுக்கு வாய்ப்பு

மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கு தயார் என தமிழகம், மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் தேர்தல் ஆணையத்திடம் கூறியுள்ளன. தமிழகத்தில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் காலியாக உள்ளன. அதிமுக உறுப்பினர் முஹம்மது ஜான் மரணமடைந்ததை தொடர்ந்தும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த வைத்திலிங்கம் மற்றும் கேபி முனுசாமி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்தும் 3 இடங்கள் காலியாக உள்ளன.  தமிழகம் தவிர மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 8 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. இந்த நிலையில் கொரோனா காலம் என்பதால் மேற்கண்ட மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் தேர்தல் ஆணையம் கருத்து கேட்டு இருந்தது. தற்போதைய சூழலில் தேர்தலுக்கு தயாராக இல்லை என மகாராஷ்டிர அரசு பதிலளித்துள்ளது.  இருப்பினும் தமிழகம்,  மேற்கு வங்கம் , அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் இடைத்தேர்தல் நடத்த தயார் என தேர்தல் ஆணையத்துக்கு பதில் அனுப்பி உள்ளன.இதனைத் தொடர்ந்து   தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைவில் இடைத் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


Next Story

மேலும் செய்திகள்