ஆணவம் மற்றும் அறியாமை என்கிற வைரசுக்கு எந்த தடுப்பூசியும் இல்லை - ராகுல் காந்திக்கு ஹர்ஷவர்தன் பதிலடி

ஆணவம் மற்றும் அறியாமை என்கிற வைரசுக்கு எந்த தடுப்பூசியும் இல்லை என ராகுல் காந்தியை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் சாடியுள்ளார்.
ஆணவம் மற்றும் அறியாமை என்கிற வைரசுக்கு எந்த தடுப்பூசியும் இல்லை  - ராகுல் காந்திக்கு ஹர்ஷவர்தன் பதிலடி
x
ஆணவம் மற்றும் அறியாமை என்கிற வைரசுக்கு எந்த தடுப்பூசியும் இல்லை என ராகுல் காந்தியை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் சாடியுள்ளார். தடுப்பூசி விநியோகம் குறித்து விமர்சனம் செய்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, "ஜூலை வந்துவிட்டது, ஆனால் தடுப்பூசி இன்னும் வரவில்லை" என ட்வீட் செய்திருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள ஹர்ஷவர்தன், மாநிலங்களுக்கான தடுப்பூசி விபரங்கள் குறித்து அறிவித்து விட்டேன் எனவும், ராகுல் காந்தி இதனை படிக்கவில்லையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தலைமையை மாற்றி அமைப்பது குறித்து காங்கிரஸ் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்