"களைய வேண்டிய துரோகிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தவர் மகேந்திரன்" - கமல் ஆவேசம்
பதிவு : மே 06, 2021, 11:30 PM
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து மகேந்திரன் விலகியது குறித்து, கமல் ஆவேசமாக பதில் அளித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து மகேந்திரன் விலகியது குறித்து, கமல் ஆவேசமாக பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், களைய வேண்டிய துரோகிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தவர் மகேந்திரன் என்று கூறியுள்ளார். முகவரி கொடுத்தவர்களின் முகங்களையே எடுத்துக் கொள்ள துணிந்தவர் மகேந்திரன் என்று  என்று தெரிவித்துள்ள கமல், கட்சிக்காக உழைக்க தயாராக இருந்த பல நல்லவர்களை தலையெடுக்க விடாமல் செய்ததே மகேந்திரனின் சாதனை என்று குற்றம்சாட்டியுள்ளார். தன்னுடைய திறமையின்மையையும், நேர்மையின்மையையும் அடுத்தவர் மீது போட்டு அனுதாபம் தேட மகேந்திரன் முயற்சிப்பதாகவும் கமல் விமர்சித்துள்ளார்.

தன்னை எப்படியும் நீக்கிவிடுவார்கள் என்பதை தெரிந்துக்கொண்டு மகேந்திரன் தானாகவே விலகி கொண்டதாகவும்,ஒரு களையே தன்னை களையென்று புரிந்துக்கொண்டு தன்னைத்தானே நீக்கி கொண்டதில் தனக்கு மகிழ்ச்சிதான் என்றும், இனி கட்சிக்கு ஏறுமுகம் தான் என்றும் கமல் கூறியுள்ளார். எனது வாழ்க்கையில் அனைத்து  விஷயங்களும் வெளிப்படையானவை என கூறியுள்ள கமல் நான் செய்த தவறுகளை மறைக்கவோ, மறுக்கவோ ஒருபோதும் முயற்சித்தது இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தோல்வியின் போது கூடாரத்தை பிய்த்துக்கொண்டு ஓடும் கோழைகளை பற்றி நாம் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை என்றும், கொண்ட கொள்கையில் தேர்ந்த பாதையில் சிறிதும் மாற்றமில்லை என்றும் தனது அறிக்கையில் கமல் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1882 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

67 views

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

46 views

பிற செய்திகள்

“மேகதாது பிரச்சினைக்கு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக“ - திருமாவளவன்

மேகதாது அணை பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

9 views

கோயில் நிலம் அபகரிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மீது புகார்... வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி

சிவகங்கையில் கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டதோடு நிலத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

35 views

சோனியா - ராகுல் - ஸ்டாலின் சந்திப்பு... அரசியல் முக்கியத்துவம் பெற காரணம் என்ன ?

தனது இரண்டு நாள் பயணத்தை முடித்து கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லியில் இருந்து சென்னை திரும்பியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடனான முதலமைச்சரின் சந்திப்பு அரசியல் கவனம் பெற்றுள்ளது..

78 views

ஜூன் 21-ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது

தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் 21 ஆம் தேதி, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

42 views

"தலைவராக தமிழர் பொறுப்பேற்பது மகிழ்ச்சி" - ஸ்டாலின்

அமெரிக்க இலினொய் தொழில்நுட்ப பல்கலைக்கழக தலைவராக தமிழர் ராஜகோபால் ஈச்சம்பாடி பொறுப்பேற்பது பெருமைக்குரியது என, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

36 views

ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள்? நாளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் நிலவும் ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலேசானை நடத்துகிறார்.

80 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.