"தோல்விக்கு பிறகும் கமல் மாறவில்லை" - மகேந்திரன்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணைத்தலைவர் மகேந்திரன் உட்பட 10 பேர் விலகியுள்ளனர்.
x
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில், ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தேர்தல் முடிவுகள், கட்சி அமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், அக்கட்யின் துணைத்தலைவர் மகேந்திரன் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மேலும், பொன்ராஜ், உள்ளிட்ட 10 மேல்மட்ட நிர்வாகிகளும் தாங்கள் கட்சியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மகேந்திரன், கமலை சிலர் திசைதிருப்பிவிட்டதாக குற்றம்சாட்டினார். தேர்தல் தோல்விக்கு பிறகும், தனது அணுகுமுறையில் இருந்து கமல் மாறவில்லை என தெரிவித்த மகேந்திரன், இனியும் கமல் மாறுவார் என்ற நம்பிக்கை தனக்கில்லை என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்