எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் மம்தா - சிரமங்களை கடந்து முன்னேறிய மம்தா பானர்ஜி

அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் - "தீதி" எனும் மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாற்றை பார்ப்போம்.....
எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் மம்தா - சிரமங்களை கடந்து முன்னேறிய மம்தா பானர்ஜி
x
மேற்கு வங்கத்தின் பெண் புலி என வர்ணிக்கப்படும் மம்தா பானர்ஜி, அரசியல் மற்றும் பொது வாழ்வில், பலருக்கு சிம்ம சொப்பனமாகவும், உதாரணமாகவும் திகழ்கிறார். 1955 ஆம் ஆண்டு, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள  அஸ்ரா என்னும் இடத்தில், ப்ரோமிலேஸ்வர் பானர்ஜி, காயத்ரி பானர்ஜி ஆகியோருக்கு மகளாக பிறந்தார் மம்தா பானர்ஜி. 1970ஆம் ஆண்டு, 15-வது வயதில் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொண்டு, பல ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டார், மம்தா...சிறு வயதில் இருந்தே வறுமையில் வாடிய நிலையிலும்,  இளங்கலை வரலாறு பட்டப்படிப்பு படித்தார், மம்தா...பின்னர் ஜோகேஷ் சந்திர சௌதுரி சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். படிப்பு மட்டுமல்லாது பேச்சு திறன், கவிதை, ஓவியம் வரைவதிலும் மம்தா சிறந்து விளங்கினார்.அரசியல் ஆர்வத்தால் உள்ளூர் காங்கிரஸில் படிப்படியாக முன்னேறிய மம்தா பானர்ஜி,  1976 முதல் 1980 வரை மேற்கு வங்க மகளிர் காங்கிரசின் பொதுச் செயலாளராக இருந்தார். பின்னர் 1984-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மம்தா,. இந்திய அரசியலில் மிகச் சிறிய வயதில் நாடாளுமன்றத்தில் நுழைந்தவர் என்ற பெருமையை  பெற்றார். எளிமையிலும் எளிமை, போராட்ட குணம், எப்போதும் மக்களுடன் இருப்பது போன்றவை இவரின் இயல்பு... 
கடந்த 1997ஆம் ஆண்டு, காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பூசலின் காரணமாக அக்கட்சியிலிருந்து அவர், வெளியேற்றப்பட்டார் . 1998-ம் ஆண்டு, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கப்பட்ட அதே ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்று, ஆளும் இடதுசாரி முன்னணிக்கு,  நேரடி எதிர்க்கட்சி தலைவராக உருவெடுத்தார்.மேலும் மேற்கு வங்கத்தில் காங்கிரசுக்கு மாற்றாக இவரின் திரிணாமுல் காங்கிரஸ் விளங்கியது. அதன் பிறகு பல கூட்டணிகளில்,
இணைந்து இரண்டு முறை மத்திய ரயில்வே துறை அமைச்சராகவும், ஒரு முறை மின்சாரத்துறை அமைச்சராகவும் செயல்பட்டார்.  பின்னர், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் கோட்டையாக விளங்கிய மேற்கு வங்கத்தில்,  அதைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து 2 முறை ஆட்சியமைத்த மம்தா, தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக விளங்குகிறார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இருந்து மேற்கு வங்கத்தில் காலூன்ற பாஜக முயற்சித்து வருகிறது. ஆனால் அது முடியவில்லை.  
தம் மீது ஒருவர் தாக்குதல் நடத்திய போதிலும், சக்கர நாற்காலில் அமர்ந்தவாறு, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் மம்தா பானர்ஜி. அதனால், தான் போராடும் குணம் கொண்ட மம்தா பானர்ஜியை மேற்கு வங்க மக்கள்,  பெண் புலி என பாசத்துடன் அழைக்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்