அரசியல் கட்சியினர் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது - இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போதும், முடிவுகளை அறிவிக்கும்போதும், அரசியல் கட்சியினர் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
அரசியல் கட்சியினர் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது - இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
x
சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போதும், முடிவுகளை அறிவிக்கும்போதும், அரசியல் கட்சியினர் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. 

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது, எந்த சமரசமுமின்றி கொரோனா தடுப்பு விதிகளை, முழுமையாக பின்பற்ற வேண்டும் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாள் ஊரடங்கு விதிப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறி இருந்தது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போதும், முடிவுகளை அறிவிக்கும்போதும், அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பதாக திட்ட வட்டமாக கூறியுள்ள தேர்தல் ஆணையம்,...

வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் இருவர் மட்டுமே சென்று வெற்றிச் சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்