கூடங்குளம் அணு உலை - பாதிப்பு இல்லை - மத்திய இணை அமைச்சர் விளக்கம்

கூடங்குளத்தில் 6 அணு உலைகளுக்கும் தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணு உலை - பாதிப்பு இல்லை - மத்திய இணை அமைச்சர் விளக்கம்
x
கூடங்குளத்தில் 6 அணு உலைகளுக்கும் தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நேற்று பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு முறையாக பின்பற்றப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், கூடங்குளத்தில், 5 மற்றும் 6ஆவது அணு உலைகள் விரைவில் கட்டி முடிக்கப்பட்டு பணிகள் தொடங்கும் என்று கூறினார். மேலும், அணுசக்தி ஒழுங்காற்று ஆணையத்தின் பாதுகாப்பு விதிகளின் படி இந்த ஆறு அணு உலைகளுக்கும் தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டு உள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்தார்..

Next Story

மேலும் செய்திகள்