பாஜக முதல்வர் விலகியது ஏன்? புதிய முதல்வர் யார்? கட்சி ஆலோசனை

உத்தரகாண்ட் பாஜக முதல்வா் திரிவேந்திர சிங் ராவத் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பாஜக முதல்வர் விலகியது ஏன்? புதிய முதல்வர் யார்? கட்சி ஆலோசனை
x
பாஜக முதல்வர் விலகியது ஏன்? புதிய முதல்வர் யார்? கட்சி ஆலோசனை ( டேராடூன், உத்தரகாண்ட்)

உத்தரகாண்ட் பாஜக முதல்வா் திரிவேந்திர சிங் ராவத் தனது பதவியை ராஜினாமா செய்தார்.உத்தரகாண்ட்டில் 2022 சட்டமன்ற தேர்தலை திரிவேந்திர சிங் ராவத் தலைமையில் எதிர்க்கொள்வது சிறப்பாக இருக்காது என பாஜக தலைவர்கள் கூறிவந்தனர்.இந்நிலையில் சனிக்கிழமை பாஜக தேசிய நிர்வாகிகள் துஷ்யந்த் சிங் கெளதம், ராமன் சிங் தலைமையில் கட்சியின் ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.45 எம்.எல்.ஏ.க்கள் கலந்துக்கொண்ட இக்கூட்டத்தில், சில தலைவர்கள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் செயல்பாடு திருப்திகரமாக இல்லை, இதனால் தேர்தலில் வெற்றிபெற முடியாது எனக் கூறியுள்ளனர் எனக் கூறப்படுகிறது.இதுகுறித்த அறிக்கை கிடைத்ததும் ஜேபி நட்டா திரிவேந்திர சிங் ராவத்தை டெல்லி அழைத்து பேசினார். அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசினார்.இதனையடுத்து டேராடூன் திரும்பிய திரிவேந்திர சிங் ராவத், தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மாநில ஆளுநர் ராணி மவுரியாவிடம் வழங்கினார். அப்போது வேறு யாருக்காவது வாய்ப்பளிக்கும் விதமாக கட்சி ஒருமித்த முடிவை எடுத்துள்ளது எனக் கூறினார்.இந்நிலையில் புதிய முதல்வராக யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து கட்சி தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு உள்ளனர்.மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை முதல்வராக்க வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவ்வரிசையில் மாநில அமைச்சர்கள் தான் சிங் ராவத், சத்பால் மகாராஜ் உள்ளிட்டோரும் உள்ளனர் எனவும் கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்