"திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை : நாளை ஸ்டாலினை சந்திக்கிறேன்" - மூத்த காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை மேற்கொள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் உம்மன்சாண்டி சென்னை வந்துள்ளார்.
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை : நாளை ஸ்டாலினை சந்திக்கிறேன் - மூத்த காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி
x
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை மேற்கொள்ள கேரள முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன்சாண்டி சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் தலைவர்களிடம் இன்று ஆலோசிக்க உள்ளதாகவும் தொகுதி பங்கீடு குறித்து திமுக தலைவரை நாளை சந்தித்து பேசுவோம் எனவும் கூறினார். மேலும், டெல்லியில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும் குழுவினர் வந்ததும், அவர்களிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார்

Next Story

மேலும் செய்திகள்