45 நாட்களில், 19 முறை பெட்ரோல் - டீசல் விலை உயர்வு... கண்டனம் தெரிவித்து ராகுல்காந்தி, பதிவு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த உண்மையை, கண்ணாடி போன்று நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
45 நாட்களில், 19 முறை பெட்ரோல் - டீசல் விலை உயர்வு... கண்டனம் தெரிவித்து ராகுல்காந்தி, பதிவு
x
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த உண்மையை, கண்ணாடி போன்று நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், கடந்த 2014 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை, பேரல் ஒன்றுக்கு, 93 டாலர்களாக இருந்ததாக கூறியுள்ளார். அப்போது பெட்ரோல் லிட்டர் ஒன்று 71 ரூபாயும், டீசல் விலை 57 ரூபாயும் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். தற்போது, கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 63 டாலர்களாக சரிந்தாலும், இந்தியாவில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 2021 -ல், பெட்ரோல் விலை 19 முறை உயர்த்தப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி டிவிட்டரில் புகார் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்