மகளிருக்கு 33% அதிகமான,இட ஒதுக்கீடு... பிரசாரத்தில், மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், மகளிருக்கு 33 சதவிகிதத்திற்கும் அதிகமான, இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
மகளிருக்கு 33% அதிகமான,இட ஒதுக்கீடு... பிரசாரத்தில், மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி
x
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், மகளிருக்கு 33 சதவிகிதத்திற்கும் அதிகமான, இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், தெற்கு பரகனாஸ் மாவட்டத்தில், பாஜக சார்பில் நடத்தப்பட்ட பேரணியில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பங்கேற்றார். சட்டமன்ற தேர்தலை ஒட்டி, நடத்தப்பட்ட இந்த பேரணியில், பரகானாஸ் சாலைகளில் நடந்து சென்று அமித்ஷா வாக்கு சேகரித்தார். அப்போது பாஜக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர், பிரசார கூட்டத்தில் பேசிய அவர் பேரவை தேர்தலில், பாஜக வெற்றி பெற்றால், அரசு ஊழியர்களுக்கு ஏழாவது சம்பள கமிஷன் அமல்படுத்தப்படும், மகளிருக்கு 33 சதவிகிதத்திற்கும் அதிகமான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார். 
இதே மாவட்டத்தில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும், அதே சமயம், பிரசாரத்தில், ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.  

Next Story

மேலும் செய்திகள்