ரஜினி மன்றத்தினரை குறிவைக்கும் கட்சிகள் : சிஸ்டத்தை சீரழித்தவர்களிடமே சரணடைவதா? - தமிழருவி மணியன் கடும் காட்டம்

ரஜினி மக்கள் மன்றத்தினர் தொடர்ந்து மாற்று கட்சிகளில் இணைந்து கொண்டிருக்க, ரஜினியை நேசிப்பவர்கள், யார் வலையிலும் சிக்க மாட்டார்கள் என்று தமிழருவி மணியன்வெளியிட்டுள்ள அறிக்கை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினி மன்றத்தினரை குறிவைக்கும் கட்சிகள் : சிஸ்டத்தை சீரழித்தவர்களிடமே சரணடைவதா? - தமிழருவி மணியன் கடும் காட்டம்
x
ரஜினி மக்கள் மன்றத்தினர் தொடர்ந்து மாற்று கட்சிகளில் இணைந்து கொண்டிருக்க, ரஜினியை நேசிப்பவர்கள், யார் வலையிலும் சிக்க மாட்டார்கள் என்று தமிழருவி மணியன்வெளியிட்டுள்ள அறிக்கை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசியலுக்கு வரப்போவதில்லை என ரஜினி அறிவித்த பிறகும், ரசிகர்கள் தொடர்ந்து அவரை அரசியலுக்கு வர வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர்.இந்த நிலையில், தான் அரசியலுக்கு வரப்போவதில்லை எனத் திட்டவட்டமாக மீண்டும் அறிவித்தார் ரஜினிகாந்த். அந்த அறிக்கையில், தயவுசெய்து இதற்குப் பிறகும் தன்னை அரசியலுக்கு வருமாறு யாரும் போராட்டங்களை நடத்தி, மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று கடுமையாக தெரிவித்திருந்தார்.ஆனாலும், சட்டப்பேரவை தேர்தலில் ரஜினி யாருக்கு ஆதரவு கொடுப்பார் என்ற எதிர்பார்ப்புகள் இருந்து வந்தன.இதனிடையே, ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் சிலர், திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.அதன் தொடர்ச்சியாக, ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விருப்பம்போல் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டதால்,யாருக்கு ஆதரவு என்ற ரசிகர்களின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்துபோனது. அந்தவகையில், ரஜினி ரசிகர்கள் மக்கள் மன்ற நிர்வாகிகள் பலர் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் தங்களை இணைத்துக்கொண்டு வருகின்றனர்.வடசென்னை ரஜினி மக்கள் மன்றத்தின் மகளிரணி  மாவட்ட செயலாளர் லஷ்மி தலைமையில் மன்ற உறுப்பினர்கள் 8 பேர் இன்று செவ்வாய்கிழமை திமுகவில் இணைந்தனர்.இதேபோல, ரஜினி தொடங்கவிருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான அர்ஜுனமூர்த்தி,புதிய கட்சியை தொடங்குவதாக அண்மையில் அறிவித்து, ரஜினி ரசிகர்களுக்கும் அழைப்பு விடுத்தது பேசுபொருளானது.இது ஒரு பக்கமிருக்க, ரஜினியை நேசிப்பவர்கள், யார் விரிக்கும் வலையிலும் சிக்கமாட்டார்கள் என்று தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிஸ்டத்தை சீரழித்தவர்களிடமே சில ரசிகர்கள் சரணடைந்திருப்பதையும், சிலர் இளைப்பாறும் வேடந்தாங்கல் எதுவாக இருக்க முடியும் என்று அலைபாய்வதையும் கண்டு வருந்துவதாக குறிப்பிட்டுள்ளார்.இனி, எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்கப்போவதில்லை என்று ரஜினி அறிவிக்கவில்லையே எனக் கூறியுள்ள தமிழருவி மணியன், மக்கள் மன்றத்தை ரஜினி கலைத்துவிடவில்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ஆள் பிடிக்கும் அநாகரிக அரசியலை தாம் அடியோடு வெறுப்பதாக அறிக்கையில் தெரிவித்துள்ள அவர், ரஜினியை நெஞ்சில் நிறுத்தி நேசிக்கும் மன்ற உறுப்பினர்கள் யார் விரிக்கும் வலையிலும் சிக்கமாட்டார்கள் என காட்டத்துடன் கூறியுள்ளார்.ரஜினி நாளையே அரசியலுக்கு வந்தாலும், அவருடன் இணைந்து பயணிப்போம் எனவும் தமிழருவி மணியன் கூறியுள்ளது, முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.ஒரு பக்கம் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் சேர்ந்துகொள்ளுங்கள் என்று ரஜினியே பச்சைக்கொடி காட்டிவிட்ட பிறகும், மறுபக்கம் ரஜினியை நேசிக்கும் மன்ற உறுப்பினர்கள் யார் விரிக்கும் வலையிலும் சிக்கமாட்டார்கள் என தமிழருவி மணியன் கூறியிருப்பது, ரஜினி அரசியல் பற்றிய கேள்விகளை மீண்டும் தொடங்கி வைத்திருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்