தகவல் தொழில்நுட்ப அணிக்கு ஆலோசனை : தேர்தல் பிரசாரத்தை எடுத்துச் செல்ல வழிவகை - J P நட்டா அறிவுறுத்தல்

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கட்சியின் தகவல் தொழில் நுட்ப அணியினருடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
தகவல் தொழில்நுட்ப அணிக்கு ஆலோசனை : தேர்தல் பிரசாரத்தை எடுத்துச் செல்ல வழிவகை - J P நட்டா அறிவுறுத்தல்
x
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கட்சியின் தகவல் தொழில் நுட்ப அணியினருடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.எதிர்வரும் சட்டப் பேரவை தேர்தலை ஒட்டி, தேசிய, மாநில கட்சிகள் தங்களை முன்னிறுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன​. மதுரையில், பிரசாரத்தை தொடங்கியுள்ள பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, சிந்தாமணி பகுதியில் உள்ள பிரம்மாண்ட கூட்டரங்கில், கட்சியின் தகவல் தொழில் நுட்ப அணியினருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.சமூக வலைதளங்களில் பாஜக தேர்தல் பிரச்சாரம், பரப்புரை உள்ளிட்டவற்றை எவ்வாறு எடுத்துச்செல்வது என்பது குறித்து ஜெ.பி.நட்டா ஆலோசனை வழங்கினார். மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநிலத் தலைவர் எல்.முருகன், பொன். ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், கே.டி.ராகவன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்