கர்நாடக சட்ட மேலவை துணை சபாநாயகர் உயிரிழந்த விவகாரம்: "சுதந்திரமான உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
கர்நாடக சட்ட மேலவை துணை சபாநாயகர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சுதந்திரமான உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கோரியுள்ளார்.
கர்நாடக சட்ட மேலவை துணை சபாநாயகர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சுதந்திரமான உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கோரியுள்ளார். கர்நாடக சட்ட மேலவை துணை சபாநாயகர் தர்மே கெளடா உயிரிழந்த விவகாரம் தனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ள ஓம் பிர்லா அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் துணை சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்த போதே அவையில் நடைபெற்ற திருதுஷ்டவசாமான சம்பவம் ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரமான தாக்குதல் எனவும் ஓம் பிர்லா சுட்டிக்காட்டி உள்ளார். சட்ட அமைப்புகளின் மரியாதையையும் அவை முன்னவர்களின் கண்ணியத்தையும் காக்க வேண்டியது நம் அனைவருடைய கடமை எனவும் ஓம்பிர்லா தெரிவித்துள்ளார்.
Next Story