"விவசாயிகளை தீவிரவாதிகள் என குறிப்பிடுவதை ஏற்க முடியாது" - மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் தேசத்திற்கே உணவளிப்பவர்கள் என்றும் அவர்களை தீவிரவாதிகள் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளை தீவிரவாதிகள் என குறிப்பிடுவதை ஏற்க முடியாது - மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து
x
விவசாயிகளுக்கு மத்தியில் சில சக்திகள் தவறான கருத்துகளை பரப்பி இருப்பதாகவும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதைத் தவிர்த்து, நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தைக்கு வந்தால், தீர்வுகாண அரசு தயாராக இருப்பதாகவும் கூறினார். 

விவசாயிகள் தேசத்துக்கே உணவளிப்பவர்கள் என்றும், அவர்கள்தான் இந்தியபொருளாதாரத்தின் முதுகெலும்பு எனவும் குறிப்பிட்டுள்ள ராஜ்நாத் சிங், அவர்களை நக்சல்கள் என்றும், தீவிரவாதிகள் என்றும் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் பிரதமர் மோடியும், தானும் வலிமிகுந்த வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.இந்திய கலாச்சாரத்தின் காவலர்களாக சீக்கிய சகோதர்கள் இருக்கிறார்கள் என்றும், இந்தியாவின் சுய மரியாதையை காப்பதில் அவர்கள் பெரும் பங்காற்றுகிறார்கள் எனவும் கூறியுள்ளார். 

குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று அரசு உறுதியளித்துள்ளது என்றும், விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்தவே முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட, எந்த நாட்டு பிரதமருக்கு உரிமை இல்லை என தெரிவித்த ராஜ்நாத் சிங், ஜனநாயகத்தில் அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், மக்கள் அவர்களை தண்டிப்பார்கள் என அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்