கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை
x
கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெறப்படும் என கர்நாடக அரசு ஆணை பிறப்பித்தது. இதனை ரத்து செய்ய கோரி, கர்நாடக ஒருங்கிணைந்த மக்கள் சுதந்திர சங்கம், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி அபய் ஹோக்கா மற்றும் நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி அமர்வு விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆகஸ்ட் 31-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்தனர்.  மேலும் இது தொடர்பான எழுத்துப் பூர்வமான வாதங்களை ஜனவரி 22 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஜனவரி 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்