துறை சார்ந்த நிபுணர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை - மத்திய பட்ஜெட் தொடர்பாக முக்கிய விவாதம்
மத்திய பட்ஜெட் தொடர்பாக உள்கட்டமைப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறை நிபுணர்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை நடத்தி உள்ளார்.
2021-22 ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களுடன் கடந்த சில நாட்களாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். வர்த்தக மற்றும் தொழிலாளர் அமைப்புகள், நீர் மற்றும் சுகாதார துறை, தொழிற்துறை மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்கள், பொருளாதார வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினரிடம் ஏற்கனவே ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இன்று 11வது நாளாக உட்கட்டமைப்பு எரிசக்தி பருவநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளின் வல்லுனர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார். நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் அபய் பூஷண் பாண்டே, தலைமை பொருளாதார ஆலோசகர் சுப்ரமணியம் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றுள்ளனர்.
Next Story