திமுக நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை கட்டளை - அதிமுகவை நிராகரிக்கிறேன்" என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்
பதிவு : டிசம்பர் 20, 2020, 03:11 PM
அதிமுகவை நிராகரிக்கிறேன் என கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக நிர்வாகிகளுக்கு தலைமை கட்டளையிட்டுள்ளது.
அ.தி.மு.க பிரமுகர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய  பிரதிகள் தி.மு.க. தலைமையிடத்தில் இருந்து கொடுக்கப்படும் என்றும் அந்த பிரதிகளை மக்களின்  கையில் சென்று சேர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தி.மு.க. நிர்வாகி ஒவ்வொருவரும் 10 கிராமங்களில் பிரசாரம் செய்ய வேண்டும் என்றும், 

அதிமுகவை நிராகரிக்கிறேன் என கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது

ஸ்டாலின் தான் வாராரு, விடியலை தர போறாரு என்ற வாசகம் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் ஒட்ட வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு தி.மு.க. தலைமை அறிவுறுத்தியுள்ளது

தங்கள் பகுதியில் நடக்கும் அவலங்களை புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து அனுப்ப வேண்டும் என்றும் தி.மு.க. நிர்வாகிகளுக்கு தலைமை அறிவுறுத்தியுள்ளது

பிற செய்திகள்

சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் நீங்கியது - கர்நாடகா அரசு மருத்துவமனை

சசிகலா நாளை விடுதலை செய்யப்பட உள்ள நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் நீங்கி நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து வருவதாக விக்டோரியா மருத்துமனை தெரிவித்துள்ளது. இது பற்றிய கூடுதல் விவரங்களை செய்தியாளர் பாரதிராஜாவிடம் கேட்போம்........

36 views

கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை - சசிகலாவின் மருத்துவ அறிக்கையில் தகவல்

சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

76 views

சசிகலா 27 - ம் தேதி விடுதலையாவது உறுதி - கர்நாடக சிறைத்துறை வட்டாரங்கள் தகவல்

சொத்து வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, நாளை மறுநாள் விடுதலை ஆவது உறுதியாகி உள்ளது.

102 views

100 நாள் செயல் திட்டம் - திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சிக்கு வந்த 100 நாளில் மக்களின் தனிப்பட்ட பிரச்சனைகள் போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

48 views

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் : தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் உதயநிதி மற்றும் திமுக நிர்வாகிகள் மரியாதை

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு மொழிப்போர் தியாகி அரங்கநாதன் நினைவு இடத்தில் திமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

15 views

திமுகவிற்கு ஆதித்தமிழர் பேரவை ஆதரவு

சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் தெரிவித்துள்ளார்.

71 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.