தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் - மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்பு

வரும் 23ஆம் தேதி முதல், திமுக தலைவர் ஸ்டாலின் நேரடி தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.
தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் - மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்பு
x
அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. ஸ்டாலின் தலைமையிலான இந்தக் கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், வரும் 23ஆம் தேதி முதல் ஜனவரி 10ஆம் தேதி வரை திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்றார். தமிழகம் முழுவதும்16 ஆயிரம் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என்றும், அதில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் முன்னணி நிர்வாகிகள் நேரடியாக பங்கேற்று கலந்துரையாடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்