"நாடு முழுவதும் 1,000 கி.மீ அளவுக்கு மெட்ரோ வளர்ச்சி திட்ட பணிகள்" - பிரதமர் மோடி

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஆறு ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 450 கிலோ மீட்டர் அளவுக்கு மெட்ரோ வழித்தடம் விரிவடைந்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் 1,000 கி.மீ அளவுக்கு மெட்ரோ வளர்ச்சி திட்ட பணிகள் - பிரதமர் மோடி
x
ஐந்து ஆண்டுகளில் எட்டாயிரத்து 379 கோடி மதிப்பில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள ஆக்ரா மெட்ரோ திட்ட கட்டுமான பணிகளை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை,சிக்கந்தா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுடன் இணைக்கும் வகையில் இரு வழித்தடங்களிலும் 29 புள்ளி 05 கிலோ மீட்டர் நீளத்திற்கு இந்த மெட்ரோ வழித்தடம் அமைக்கப்படவுள்ளது.இந்த திட்டத்திற்கான கட்டுமான பணிகளை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, மெட்ரோ வளர்ச்சி திட்ட பணிகள் மூலம் ஆக்ராவின் பழமையான அடையாளத்திற்கு நவீனத்தின் புதிய பரிமாணம் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை நாட்டில் மொத்தமே 225 கிலோ மீட்டர் அளவுக்கு மட்டுமே மெட்ரோ வழித்தடம் இயக்கத்தில் இருந்ததாகவும், அதன் பிறகு தற்போது சுமார் 450கிலோ மீட்டர் அளவுக்கு மெட்ரோ வழித்தடம் விரிவடைந்து உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தற்போது ஆயிரம் கிலோ மீட்டர் அளவுக்கான மெட்ரோ வளர்ச்சித் திட்டப் பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்