கொரோனா ஆய்வு கட்டணம் ரூ.800 ஆக குறைக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
பிற மாநிலங்களைப் போல கொரோனா ஆய்வு கட்டணத்தை 800 ரூபாயாக, குறைக்க வேண்டும் என, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பிற மாநிலங்களைப் போல கொரோனா ஆய்வு கட்டணத்தை 800 ரூபாயாக, குறைக்க வேண்டும் என, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றைக் கண்டுபிடிக்க தனியார் ஆய்வகங்களில் ரூ.3,000 முதல் ரூ.3,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார். மற்ற மாநிலங்களின் குறைந்தபட்ச கட்டணத்தை விட 4 மடங்குக்கும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிப்பதாகவும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
Next Story