வாரணாசி-பிரயாக்ராஜ் - 6 வழிச்சாலையாக விரிவாக்கம் - பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்
நாட்டில் உள்ள விவசாயிகளிடம் இருந்து, பாஜக அரசு, இதுவரை 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நெல்லை கொள்முதல் செய்து உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஆறு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள, வாரணாசி-பிரயாக்ராஜ் தேசிய நெடுஞ்சாலை 19-இன் ஹாண்டியா பிரிவை பிரதமர் நரேந்திர மோடி, நேரில் சென்று திறந்து வைத்தார். பின்னர் பேசிய பிரதமர் மோடி, இந்த நெடுஞ்சாலையின் அகலமானது காசிக்கும், பிரயாக்ராஜுக்கும் இடையில் பயணத்தை எளிதாக்கியுள்ளது என்றார். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையின் படி ஒன்றரை மடங்கு குறைந்த பட்ச ஆதார விலை தருவோம் என உறுதி அளித்ததாக சுட்டிக் காட்டியுள்ளார். இந்த வாக்குறுதி வெறும் காகிதத்தில் மட்டும் அல்லாது விவசாயிகளின் வங்கிக் கணக்குகளை சென்றடைந்துள்ளது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, வெறும் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே குறைந்த பட்ச ஆதார விலை அடிப்படையில் நெல்லை கொள் முதல் செய்துள்ளது என்றார். ஆனால் பாஜக அரசு, ஐந்து ஆண்டுகளில், 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள் முதல் செய்துள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
Next Story