வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரிக்கை - போராட்டம் தொடர்பாக பாமக ஆலோசனை

வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீட்டு போராட்டம் பற்றி விவாதிக்க பா.ம.க, வன்னியர் சங்க கூட்டுப் பொதுக்குழு கூட்டம் காணொலி மூலம் இன்று நடைபெறுகிறது.
வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரிக்கை - போராட்டம் தொடர்பாக பாமக ஆலோசனை
x
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு என்ற 40 ஆண்டுகால கோரிக்கையை வலியுறுத்தி, வரலாறு காணாத அளவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த தயாராக வேண்டும் என்று பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தை அறவழியில் எவ்வாறு நடத்துவது? எந்த தேதியில் நடத்துவது? என்பது குறித்து விவாதித்து முடிவெடுப்பதற்காக பாமக மற்றும் வன்னியர் சங்க கூட்டுப் பொதுக்குழு இன்று காலை 11.00 மணிக்கு இணைய வழியில் நடைபெற இருக்கிறது. பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் கானொலி மூலம் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு பிறகு, போராட்டத்திற்கான தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்