பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாய கூட்டணி ஆட்சி - "வெற்றிக்கான 5 காரணிகள் என்ன?"

பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை ​பிடிக்க 5 காரணிகள் உதவியிருப்பது தெரியவந்துள்ளது.
பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாய கூட்டணி ஆட்சி - வெற்றிக்கான 5 காரணிகள் என்ன?
x
பீகாரில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி, நான்காவது முறையாக தற்போது ஆட்சியை பிடித்துள்ளது. இதற்கு 5 காரணிகள் முக்கிய பங்காற்றி உள்ளன. ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி முஸ்லீம்கள் மற்றும் யாதவர்கள் வாக்குகளை நம்பிய நிலையில், ​நிதிஷ்குமாரின் குர்மி சாதியினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர், மத ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட உயர்சாதி இந்துக்களின் வாக்குகள் இந்த முறை பா.ஜ.க. கூட்டணிக்கு கை கொடுத்துள்ளது. பெண்கள், இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டு வந்து வாக்களித்தது பா.ஜ.க. கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. கடந்த முறை நிதிஷ்குமார், மோடி என பிரிந்த இந்த வாக்குகள் இந்த முறை ஒருங்கிணைந்தது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பாக மாறியுள்ளது. பீகார் தேர்த​ல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி மற்றும் நிதிஷ்குமார் ஆகியோர் உணர்ச்சி பூர்வமாக முன்வைத்த சில பேச்சுகள்  வாக்காளர்கள் இடையே ஆதரவை பெற்று தந்துள்ளது. உதாரணமாக லாலு ஆட்சியை காட்டாட்சி என்றும் ராகுல்காந்தி, தேஜஸ்வியை இளவரசர்கள் என்றும் பிரதமர் மோடி விமர்சித்தது, இது தான் எனது கடைசி தேர்தல் என நிதிஷ்குமார் பேசியது, சிராக் பாஸ்வான் வாக்குகளை வீணடிப்பவர் என பேசியது எல்லாம் வாக்காளர்களை தேசிய ஜநநாயக கூட்டணி பக்கம் திருப்பியது தெரியவந்துள்ளது. பன்முனை போட்டி நிலவியது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிரான வாக்குகளை சிராக் பாஸ்வான், ஓவைசி, பப்பு யாதவ், உபேந்திர குஸ்வாகா ஆகியோர் பிரித்ததும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் நிதிஷ்குமார் அரசுகள் நடைமுறைபடுத்திய பல்வேறு நேரடி பணபரிமாற்று திட்டங்கள் இந்த தேர்தலில், அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தணித்து, வெற்றி வாய்ப்புக்கு உதவியாக அமைந்துள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்