"அத்தியாவசிய பொருட்களுக்கான சட்டத்திருத்தத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்" - பிரதமருக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம்

அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திருத்தத்தை, உடனடியாக திரும்ப பெற வேண்டும் என மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அத்தியாவசிய பொருட்களுக்கான சட்டத்திருத்தத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் - பிரதமருக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம்
x

"வெங்காயம், உருளைக்கிழங்கு பதுக்கப்படுகிறது"
"மாநில அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது"


அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திருத்தத்தை, உடனடியாக திரும்ப பெற வேண்டும் என மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில், இந்த சட்டத்தினால், அத்தியாவசிய பொருட்களான உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவை பதுக்கி வைக்கப்படுவதாகவும் இதனால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களின் இந்த துன்பத்தை மாநில அரசு வெறும் பார்வையாளராக பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். எனவே இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 
===


Next Story

மேலும் செய்திகள்